About us


INTRODUCTION

• உலகின் மதங்களுக்கெல்லாம் தாய்மதம் ‘ஹிந்து மதம்’ என்று முழங்கினார் ஸ்வாமி விவேகானந்தர். நம் தாய்மதமாம் ஹிந்து மதம் பற்றிய அடிப்படை விஷயங்களையாவது தெரிந்துகொள்ள வேண்டுமே என்ற ஆதங்கம் உடையவரா நீங்கள்?

• ஹிந்துவாகப் பிறந்தது பெருமை; வாழ்வது பெருமை: ஹிந்துவாகவே வாழ்வை நிறைவு செய்வதும் பெருமை. அப்படியானால் ஹிந்துவின் பெருமைக்குரிய பண்புகள் மற்றும் கலாச்சார உன்னதங்கள் எவை எவை என்று அறிய விழையும் ஆர்வலரா நீங்கள்?

• வாழையடி வாழையாக மஹான்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அமரத் தன்மை வாய்ந்த ஹிந்து மதத்தின் பெருமையைக் கற்று உணர்ந்து வாழ விழைபவரா நீங்கள்?

• விஞ்ஞானம் எங்கே முடிவடைகின்றதோ அங்கேயும் ஹிந்துமத மெய்ஞ்ஞானம் தொடர்கின்றது என்பதை விளக்கமாக அறிய விரும்புகிறவரா நீங்கள்?

• “என் குடும்பம் ஒரு லட்சிய ஹிந்து குடும்பமாக இருக்க வேண்டும்” என்ற ஆசை உடையவரா நீங்கள்?

• ஆலயங்களின் அற்புதங்கள், மந்திரங்களின் மஹத்துவங்கள், தத்துவ நுணுக்கங்கள், தர்ம சாஸ்திர விளக்கங்கள், தியானம் செய்வது எப்படி? யோகம் என்றால் என்ன? பூஜை செய்யும் முறைகள் என்ன? பஞ்சாங்கம் பார்ப்பதின் பயன்பாடு, மஹான்களின் வாழ்க்கை உணர்த்தும் நெறிகள் மற்றும் நமது மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்ற தயக்கம் உள்ளவரா நீங்கள்?

இந்த கேள்விகளில் ஏதாவது ஒரு கேள்விக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றாலும் கூட அதற்கான பதிலையும் விளக்கத்தையும் கொடுப்பதற்காகத்தான் பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம். பூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளால் விஜய ஆண்டு (2013) திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த கல்வி மையம் “ஹிந்து தர்ம ஞானம்” மற்றும் “இல்லந்தோறும் இராமாயணம்” என்ற இரண்டு அஞ்சல் வழிக் கல்வி திட்டங்கள் மூலம் ஹிந்து மக்களிடையே சனாதனமாகிய நமது ஹிந்து தர்மத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி வருகின்றது.

ஹிந்து தர்மத்தின் பெருமைகள் என்ன? என்பதை உள்ளது உள்ளபடி நாமே அறியாமல் இருப்பதுதான் நமது இன்றைய அனைத்து சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் முக்கியக் காரணம். அதற்கானத் தீர்வாகத்தான் இந்த இரண்டு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இல்லத்திலிருந்தபடியே நமது ஹிந்து தர்மத்தை அறிய இதனை ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி நாம் அனைவரும் இந்த கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்பதே நமது இன்றைய தேவையாகும்.

Event Details

S.NO DATE CITY/TOWN PLACE NO.OF. STUDENTS
1. 19.09.2021 Thiruvannamalai Amudha Mahal 19
2. 26.09.2021 Thirukovilur Vidya Mandhir School 26
3. 16.10.2021 Erode Egal Kosalai 18
4. 17.10.2021 Coimbatore Sadhguru Seva Ashram 20
5. 18.10.2021 Avinasi Mahathmaananda Saraswathi 57
6. 24.10.2021 Naagarkoil Sri Saradha Ashram 41
7. 06.11.2021 Thanajvur Trinity CBSE School 36
8. 13.11.2021 Pillayaar Patti Hariharan Auditorium 28
9. 14.11.2021 Paramakudi K.V.R.Rice Mill 30
10. 21.11.2021 Chennai Vivekanandha Vidyalaya School 20
11. 04.12.2021 Thenkasi Brahmasakthi Complex 35
12. 05.12.2021 Thuthukudi SAV H.S.School 25
13. 11.12.2021 Trichy Kuzhumiyaznandha Ashram 21
14. 18.12.2021 Virudhu Nagar NGO Colony 18
15. 19.12.2021 Madurai Iyer Bangala 15
16. 25.12.2021 Kattu Manar Kovil SSS Mahal 19
17. 26.12.2021 Pondycherry Sri Vinayagar Kovil 15
18. 01.01.2022 Theni Vaalai Sidhi Vinayagar koil 21
19. 02.01.2022 Ottan Chathiram Palaniyappa Mandapam 17

அருமையுறு பொருளிலெல்லாம் மிக அரியதாய்த்
தனைச்சாரும் அன்பர்க்கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக் கருதி
அதன் சொற்படியிங் கொழுகாத மக்களெல்லாம்
கவலை யென்னும் ஒருநரக குழியதனில்
வீழ்ந்துதவித் தழிகின்றார் ஓய்விலாமே.
- மகாகவி பாரதியார்

“உலகிலுள்ள மிகச்சிறந்த விஷயங்களில் மிக அரியதானதும், தன்னை சார்வோருக்கு உயர்வான வாழ்வும், நல்ல துணையுமாக விளங்குவது ஹிந்து தர்மம். இத்தகைய ஹிந்து தர்மத்தில் பிறந்தும் அதன் பெருமைகளை உணராமல், அதன் உன்னதமான கருத்துக்களைப் பின்பற்றாமல் வாழும் மக்கள் பல்வேறு விதமான கவலைகள் எனும் குழியில் விழுந்து தவித்து வாழ்க்கையை அழித்து விடுகின்றனர் ”.

நமது தர்மம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தவத்தில் சிறந்த ரிஷி, முனிவர்களால் தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும், தேசிய வாழ்விலும் சிறந்து விளங்க கண்டறியப்பட்ட மேன்மையான பழக்க வழக்கங்களை கொண்டது ஹிந்து தர்மம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது முன்னோர்கள் அவர்களது வாழ்க்கையில் இத்தகைய மேன்மையான பழக்க வழக்கங்களை, சமய வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து, உலகம் போற்றும் ஓர் உன்னத வாழ்வை வாழ்ந்து, ஹிந்து சமய வாழ்க்கை முறையின் சிறப்பை உணர்த்தி உள்ளனர்.

உலகிலேயே தனி மனிதனின் முழுமையான மேம்பாட்டிற்கான தெளிவான செயல் முறையை கொண்டுள்ள ஒரே ஒரு சமயம் ஹிந்து சமயமே. கடந்த எண்ணற்ற பிறவிகளில் நாம் ஈட்டிய புண்ணியத்தாலேயே இந்தப் பிறவியில் ஹிந்துவாகப் பிறக்க பேறு பெற்றோம்.

இந்த ‘பிரபஞ்சம்’ (UNIVERSE) இறைவனால் படைக்கப்பட்டடது என்பதனை அனைத்து மதங்களும் ஒப்புக் கொள்கின்றன. இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பொழுது, இந்த பிரபஞ்சத்தினை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட பயன்பாட்டிற்கான (இயற்கை) விதிமுறைகள், இயற்கையின் இயக்கத்திற்கு இன்றியமையாத நியதிகளே தர்மம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர். அதாவது ஆங்கிலத்தில் USER MANUAL for UNIVERSE.தர்மம் என்பது அனைத்துக் காலக் கட்டங்களிலும் அனைத்து தேசங்களிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

இந்த பிரபஞ்சமே இறைவனின் திருமேனி. அதாவது, கண்ணுக்குத் தெரியாத கடவுள் நம் கண்முன் இயற்கையாக இயங்கிக்கொண்டு இருக்கிறார். ஆக, இறைவனே இயற்கை ஆகி இருக்கிறார். இயற்கை இறைவனில் இருந்து வேறுபட்டது அல்ல. அப்படி இருக்கும்போது அந்த இயற்கையின் இயக்க நியதிகளும் இறைவனில் இருந்து வேறுபட்டிருக்க முடியாது அல்லவா. அந்த நியதிகளும் இறைவனைப் போலவே, இயற்கையைப் போலவே சாஸ்வதமானதாக சனாதனமாகத்தானே இருக்க முடியும். அதாவது இறைவன், இயற்கை, இயற்கையின் இயக்க விதிகளாகிய தர்மம் இவை மூன்றுமே சாஸ்வதமானவை; சனாதனமானவை; என்றும் இருப்பவை. எனவே, சனாதன தர்மம் என்ற சொற்றொடரின் மூலப்பொருள் என்றும் இருக்கும் ‘இயற்கை நியதிகளாகிய தர்மத்தையே’ குறிக்கும்.

இந்த இயற்கை நியதிகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு ஏற்ப யாரெல்லாம் தம் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் நிச்சயம் ஏற்றம் பெறுவார்கள். யாரெல்லாம் இந்த நியதிகளை மீறுகிறார்களோ அவர்களெல்லாம் வாழ்வில் நிச்சயம் துன்பத்தைத்தான் சந்திப்பார்கள். அப்படியானால், இந்த இயற்கை நியதிகளை மக்களுக்குத் தெளிவுற எடுத்துரைத்துப் பின்பற்றச் செய்வது அவசியமாகிறது. இந்த அவசியமான பேருதவியைப் புரிகிற சமயத்திற்கும் ‘சனாதன தர்மம்’ என்ற பெயரே நம் முன்னோர்களால் வழங்கப்பட்டுள்ளது.

ஆக, இறைவன், இயற்கை, இயற்கை நியதிகள் இவற்றைப்போல அந்த நியதிகளை முறைப்படுத்தி, வாழ்வில் பின்பற்ற வசதியான முறையில் அளிக்கும் சமயமும் ‘சனாதன தர்மமே’ ஆகிறது. ஆக, சனாதன தர்மம் மட்டுமே தர்மம் ஆகும்; மற்றவைகள் எல்லாம் மதங்கள் ஆகும். மதம் என்கின்ற வார்த்தைக்கு ‘கொள்கை’ என்று அர்த்தம்.

இந்த சனாதன தர்மம் மட்டுமே ‘சாமான்ய தர்மம்’ என்றும் ‘விசேஷ தர்மம்’ என்றும் விரிந்து நிற்கின்றது. மதங்களில் ‘சாமான்ய தர்மம்’ மட்டுமே உண்டு; ‘விசேஷ தர்மம்’ கிடையாது.

நமது சிறப்பு

உலகில் தோன்றிய மதங்களிலெல்லாம் நமது ஹிந்து தர்மம் சிறப்புற்று விளங்குவதற்குக் காரணம், அது நம்மை கேள்வி கேட்க அனுமதிப்பதே ஆகும். ஹிந்து தர்மம் மட்டுமே அறிவுபூர்வமான ஆராய்ச்சிக்கு இடமளிக்கிறது.

எத்துறையிலும் மேலோட்டமான அறிவானது, உரிய பயனைத் தருவதில்லை. ஆழமான, தெளிந்த அறிவே உள்ளத்தில் தெளிவையும், உள்ள உறுதியையும் அருளும். நூலறிவும் பட்டறிவும் இணையும்பொழுதுதான், அது நுண்ணறிவாகின்றது. தெளிவான பார்வைக்குத் கண்ணொளியும் விளக்கொளியும் தேவையாவது போன்று.

ஓர் உயர்ந்த பண்பாட்டுப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம். ரிஷி வழிவந்த ஞானப் பொக்கிஷத்தை உடைய உண்மையான செல்வந்தர்கள் நாம். இந்த ஞானக் கருவூலத்தை நமக்குத் திறந்து காட்டி நம்மிடம் உள்ள, அள்ள அள்ளக் குறையாத, நீங்காத செல்வத்தைத் தந்தவர்கள் மகான்களும் ஞானிகளும் சித்தர்களும் ஆவர்.

ஹிந்து என்று பெருமையோடு சொல்வதற்குக் காரணம் நம் தர்மத்தின் சிறப்பே ஆகும். தர்மம் என்ற சொல் பாரதீய மொழிகள் தவிர வேறு எந்த மொழியிலும் காணக் கிடைக்காதது.


காலத்தின் கட்டாயம்:-

ஒவ்வொரு ஹிந்துவும் தம் தர்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது கடமையாகும், கட்டாயப் பணியுமாகும். அப்படி நம் தர்மத்தின் அடிப்படை நூல்கள், அர்த்தமுள்ள சடங்கு சம்பிரதாயங்கள், அவதரித்த அருளாளர்கள், அவர்கள் வழி வந்த அருளிச் செயல்கள், பாரம்பரியப் பெருமைகள் போன்றவற்றை எடுத்துச் சொல்ல முன்பெல்லாம் வீடுகளில் நம் பாட்டி தாத்தாக்கள் இருந்தார்கள். பெரியவர்கள் சொல்லிரியும் செய்தும் வழி காட்டினார்கள். ஆலயங்களிலும் சமயச் சொற்பொழிவுகள், பஜனை, உத்ஸவங்கள் என நடந்த வண்ணம் இருந்தன.

தற்போது குடும்பங்கள் சுருங்கி விட்டன. இயந்திர கதியில் அனைவரும் பறந்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள பல ஆபத்துக்களை, சவால்களை அன்றாடம் நாம் சந்திக்க வேண்டியிருக்கின்றது; சமாளித்து வெற்றி கொள்ளவும் வேண்டியிருக்கின்றது.

தர்மம் என்ற பலமான ஆயுதம் நம்மிடமிருந்தும், அறியாமையின் காரணமாக தர்மத்தை அறிந்து கொள்ளாமலும் அனுஷ்டிக்காமலும் வாழ்கின்றோம். இந்த ஆயுத பலத்தை அறியாமலும், அறிந்து பயன்படுத்தாமலும் இருப்பதால் ஹிந்துக்களாகிய நாம் எண்ணிக்கையில் குறைந்து வருகிறோம்; நம் சொந்த மண்ணையும் (இடங்களையும்) இழந்து வருகின்றோம்.

பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம்:-

பூஜ்ய ஸ்ரீ தயாநந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசிகளுடன் துவங்கப்பட்டு, பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த ஸ்வாமிகளின் தலைமையில் வளர்க்கப்பட்ட தர்ம ரக்ஷண ஸமிதி ஹிந்துக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த தமிழகத்தில் பல்வேறு சமுதாயப் பணிகளை நடத்தி வருகின்றது. அதனை தாய் அமைப்பாக கொண்டு, ஸ்வாமிஜியின் அருளாசிப்படி, ஹிந்து சக்தி மணம் வீச மலர்ந்திருப்பதுதான் பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம் ஆகும்.

ஹிந்து தர்மத்தின் பெருமைகள் என்ன? என்பதை உள்ளது உள்ளபடி நாமே அறியாமல் இருப்பது தான் இன்றைய எல்லா சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் காரணம். அதற்கானத் தீர்வாகத்தான் இந்த ஹிந்து தர்ம ஞானம் அஞ்சல்வழிப் பாடத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இல்லத்திரிருந்தபடியே நமது ஹிந்து தர்மத்தை அறிந்துக் கொள்ள இரண்டு அஞ்சல்வழி பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றது பாரதீய அறநெறிப் பண்பாட்டு கல்விமையம். அவை 1. ஹிந்து தர்ம ஞானம். 2. இல்லந்தோறும் இராமாயணம் ஆகும்.


ஹிந்து தர்ம ஞானம்:

ஹிந்து தர்ம ஞானம் - சான்றிதழ் படிப்பு கால அளவு ஓர் ஆண்டு ஆகும். பாட விஷயங்கள் பத்து (10) தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

1.அஞ்சல் வழி கல்வி அர்ப்பணத் தொகை ரூ.800/-

2.இணைய வழி கல்வி அர்ப்பணத் தொகை ரூ.500/-



இல்லந்தோறும் இராமாயணம்:

பாரதீயப் பண்பாட்டின் ஆதாரம் குடும்பங்களே. குடும்பம்தான் நம் தேசத்தின் அடிப்படை அலகு; தனிமனிதன் அல்லன். பெற்றோர் பக்தி பெருகிட, ஸஹோதர பாசம் பரவிட, ல•ய ஆனும் (ராமன்) ல•ய பெண்ணும் (ஸீதை) உருவாகிட, பொறுமை வடிவாம் மனைவி பெற்றிட, நல்லதொரு குடும்பம் அமைந்திட, úஸவைத் தொண்டன் ஆகிட, தேச பக்தி பொங்கிட, இன்றையச் சூழரில் உடனடித் தேவை இராமாயணமே. வால்மீகி இராமாயணத்தின்படி ஏழு (7) காண்டங்களுக்கானக் கதைகள் 9 புத்தகங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

1.அஞ்சல் வழி கல்வி அர்ப்பணத் தொகை ரூ.800/-

2.இணைய வழி கல்வி அர்ப்பணத் தொகை ரூ.500/-



இந்த 9 ஆண்டுகளில் இந்த இரண்டு கல்வித் திட்டங்களின் மூலம் 14,316 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதன் விவரம்:

ஆண்டின் பெயர் ஹி.த.ஞா இ.இரா மொத்தம்
1.விஜய ஆண்டு (2013-14) 1098 --- 1098
2.ஜய ஆண்டு (2014-15) 1852 --- 1852
3.மன்மத ஆண்டு (2015-16) 704 --- 704
4.துர்முகி ஆண்டு (2016-17) 2542 3088 5630
5.ஹேவிளம்பி ஆண்டு(2017-18) 761 332 1093
6.விளம்பி ஆண்டு (2018-19) 838 118 956
7.விகாரி ஆண்டு (2019-20) 620 295 915
8.சார்வரி ஆண்டு (2020-21) 567 400 967
9.பிலவ ஆண்டு (2021-22) 593 508 1101
9,575 4,741 14,316

இனிவரும் ஆண்டுகளில் இந்த மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கவும், நமது ஸனாதனமான ஹிந்து தர்மத்தை தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு செல்லவும் ஆக்கபூர்வமான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.


இப்பாடத்திட்டம் வெற்றி பெறுவதற்குத் அனைத்து ஹிந்து மக்களின் ஆர்வமும், ஆதரவும்தான் மிக முக்கியத் தேவை. நமது தர்மத்தின் பெருமையையும், கலாசாரத்தின் மாண்பினையும் அறிந்து கொள்ளவும், நமது இளைய தலைமுறையினருக்கு நமது தர்மத்தின் உன்னதத் தன்மையினை எடுத்துச் சொல்லவும், இந்த இரண்டு பாடத்திட்டங்கள் நமக்கு பெரிதும் உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதன் மூலம் ‘ஞானத்திற்கு ஈடு ஞாலத்தில் இல்லை’ என்ற பூஜனீய ஸ்வாமிஜியின் வாக்கு மெய்ம்மை என்பதை அனுபவபூர்வமாக உணர்வோம்.


வாருங்கள்! ஹிந்து தர்மத்தினை கற்போம்! கடைப்பிடிப்போம்! கற்பிப்போம்! காப்போம்! மேன்மைக் கொள் ஹிந்து தர்மம் விளங்குக உலகமெல்லாம்!!

CBDCS Digital Learning